இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற
குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட
வேண்டியது அவசியமானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ
மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
இலங்கை விவகாரத்தில் சர்வதேச விசாரணை அவசியமா இல்லையா என்பதனை உறுப்பு
நாடுகளே நிர்ணயிக்க வேண்டும். இதேவேளை இறுதிக் கட்ட யுத்தத்தின் போது
குற்றச் செயல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும்
எனவும் தெரிவித்துள்ளார்.


0 Comments