பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிறப்பாக துடுப்பெடுத்தாடி சாதனைகள் பலவுடன் சதங்களை பெற்ற இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது டெஸ்ட்
தொடரில் பங்கேற்று வருகின்றது. இதில் குமார் சங்கக்கார சிறப்பாக
துடுப்பெடுத்தாடி சாதனைகள் பலவுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது
முதலாவது முச்சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த முச்சதம் மூலம் டெஸ்ட்
அரங்கில் தனது அதிகூடிய ஓட்டப்பெறுதியையும் சர்வதேச டெஸ்ட் அரங்கில்
குறைந்த இன்னிங்ஸில் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையையும்
படைத்தார்.
இதேவேளை சங்கா, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய சதமடித்த (35 சதம்)
முதலாவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் சர்வதேச ரீதியில் அதிகூடிய
சதமடித்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தையும் பெற்றார்.
இந்நிலையில் இலங்கை அணியின் இன்றைய 2அவது இன்னிங்ஸில் சங்கக்கார 105
ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததோடு ஒரு டெஸ்ட் தொடரில் 424 ஓட்டங்களை பெற்ற
வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதற்கு முன்னர் கிரஹாம் கூச்தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற பெருமைக்குரியவர்.
இங்கிலாந்து அணியின் கிரஹாம் கூச், 1990ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான
டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 333 ஓட்டங்களையும், 2வது இன்னிங்ஸில்
123 ஓட்டங்களையும் (மொத்தம் 456) குவித்தார், அவர்தான் டெஸ்ட் போட்டிகளில்
அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்.
இவருக்கு அடுத்தபடியாக ஒரே டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் மூன்று
சதமும், மற்றொரு இன்னிங்ஸில் மற்றொரு சதமும் அடித்த 2வது வீரர் என்ற
பெருமைக்குரியவானார் சங்கக்கார.
இருப்பினும் இன்னும் 33 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும், கூச்சின் சாதனையை மிஞ்சியிருக்கலாம்.
இவ்வாறு சாதனைகள் பல படைத்த குமார்
சங்கக்காரவுக்கு சர்வதேச ரீதியில் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சங்காவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை
தெரிவித்துள்ளார்.





0 Comments