3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி அபுதாபியில் கடந்த வாரம் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று துபாயில் ஆரம்பமாகவுள்ளது.
முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 179 ஓட்டங்களால் பின்னடைவிலிருந்த போதிலும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 380 ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையை அடைந்தது. அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் தனது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையையும் (ஆட்டமிழக்காமல் 157) பெற்றார்.
சிறப்பாக துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலே மெத்தியூஸ் இரண்டாவது போட்டியிலும் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கலாம்.
அதேவேளை முதலாவது, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சயீட் அஜ்மல் பிரகாசிக்கத் தவறியமை பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இரண்டாவது இன்னிங்ஸில் 49 ஓவர்களை வீசிய சயீட் அஜ்மல் 115 ஓட்டங்களைக் கொடுத்தபோதிலும் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.
36 வயதான சயீட் அஜ்மல் டெஸ்ட் போட்டியொன்றின் 2 ஆவது இன்னிங்ஸில் 17 ஓவர்களுக்கு மேல் வீசி, விக்கெட் எதையும் கைப்பற்றத் தவறிய முதலாவது சந்தர்ப்பமாக அது அமைந்தது.
ஆனால் துபாயில் நடைபெறவுள்ள 2 ஆவது போட்டியில் தனது சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்படுவர் என பாகிஸ்தான் அணி நம்பிக்கை கொண்டுள்ளது.
இம்மைதானத்தில் இறுதியாக நடைபெற்ற பாகிஸ்தான் - தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 12 விக்கெட்டுகளை சுழற்பந்துவீசாளர்களே வீழ்த்தினர். சயீட் அஜ்மலும் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் அப்போட்டியில் தென் ஆபிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றது.
எவ்வாறெனினும் இன்று ஆரம்பமாகவுள்ள இரண்hடவது டெஸ்ட் போட்டி மழையினால் பாதிக்கப்படாமல் இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மழை காரணமாக நேற்று இரு அணிகளும் தமது பயிற்சியை ரத்துச்செய்தமை குறிப்பிடத்தக்கது.
துபாய் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகப் போவது ஆறாவது டெஸ்ட் போட்டியாகும். நடுநிலையான ஆனால் பாகிஸ்தானுக்கு தத்து மைதானமான இந்த அரங்கில் இதுவரை நடந்துமுடிந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
2011இல் இலங்கைக்கு எதிராக ஒரு வெற்றியையும் 2012இல் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு வெற்றிகளையும் பாகிஸ்தான் பதிவு செய்துள்ளது.
2010 தென் ஆபிரிக்காவுடனான போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்ட பாகிஸ்தான அணி;, 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆhபிரிக்காவுடனான போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது.

0 Comments