ஹலால் சான்றிதழ் விநியோக செயற்பாட்டினை இடைநிறுத்தியுள்ளதாக அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமா அறிவித்துள்ள நிலையில் ஹலாலுக்கு எதிரான போராட்டத்தை
மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக பொதுபலசேன இன்று அறிவித்துள்ளது. முஸ்லிம்கள் ஹலால் உணவினை நுகரும் உரிமையினை நாங்கள் மதிக்கின்றோம். எனினும், இந்த செயற்பாடு ஏனையவர்களை வற்புறுத்துவதாக இருக்கக்க கூடாது எனவும் பொதுபலசேன குறிப்பிட்டுள்ளது.
ஏற்றுமதி செயற்பாட்டிற்கு ஹலால் இலச்சினையை இலங்கை தர நிர்ணய சபை மற்றும் சர்வதேச தர நிர்ணய சபை ஆகிவற்றின் ஊடாக வழங்குவதற்கு எந்தவித எதிர்ப்புமில்லை எனவும் பொதுபலசேன தெரிவித்துள்ளது.
கொழும்பில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பொதுபலசேனவின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு கூறினர்.

0 Comments