Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று: ஜனவரி 8

1297 : மொனாக்கோ சுதந்திரம் பெற்றது.

1782 : திருகோணமலை கோட்டையை பிரித்தானியர் கைப்பற்றினர்.

1815 : அண்ட்ரூ ஜக்ஸன் தலைமையில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் லூசியானாவின் நியூ ஓர்லீன்சில் பிரித்தானியரைத் தோற்கடித்தனர். 

1838 : அல்பிரட் வெயில், புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலைத்தந்தியை அறிமுகப்படுத்தினார்.

1867 : வாஷிங்டன் டிசியில் கறுப்பின அமெரிக்கர்கள் முதன்முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

1889 : ஹெர்மன் ஹொல்லெரிக் மின்னாற்றலில் இயங்கும் பட்டியலிடும் கருவிக்கான  காப்புரிமம் பெற்றார்.

1902 : நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

1906 : நியூ யோர்க்கில் ஹட்சன் ஆற்றில் களிமண் தோண்டும் போது இடம்பெற்ற நிலச்சரிவில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

1912 : ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டது.

1916 : முதலாம் உலகப் போரில் கூட்டுப் படைகள் துருக்கியின் கலிப்பொலியில் இருந்து வெளியேறின.

1926 : அப்துல் அசீஸ் இபன் சவுத் ஹெஜாஸ் நாட்டின் மன்னராக முடிசூடினார்.

1940 : இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா உணவுப் பங்கீட்டை அறிமுகப்படுத்தியது.

1956 : ஈக்குவடோரில் ஐந்து அமெரிக்க மதபோதகர்கள் பழங்குடியினரால் கொல்லப்பட்டனர்.

1959 : பிடெல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி முடிவுக்கு வந்தது.

1962 : நெதர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 93 பேர் கொல்லப்பட்டனர்.

1963: லியனார்டோ டா வின்ஸியின் மோனலிஸா ஓவியம் அமெரிக்காவில் முதல் தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.

1964: அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன், அமெரிக்காவில் வறுமைக்கு எதிரான யுத்தத்தை பிரகடனப்படுத்தினார்.

1971: பங்களாதேஷ் சுதந்திரப் பிரகடனத்தையடுத்து கைது செய்யப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் விடுதலையானார்.

1973 : சோவியத் விண்கலமான லூனா 21 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1994:  ரஷ்யாவின் விண்வெளி வீரர் வலேரி பல்யாக்கொவ் மீர் விண்வெளி நிலையத்துக்கு சோயூஸ் விண்கப்பலில் பயணமானார். இவர் மொத்தமாக 437 நாட்கள் விண்ணில் தங்கியிருந்து சாதனை படைத்தார்

1995 : சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும்  தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான  போர் நிறுத்தம் ஆரம்பமாகியது.

1996 : ஆபிரிக்க நாடான ஸயரில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 350 பேர் கொல்லப்பட்டனர்.

2003: துருக்கியில் இடம்பெற்ற விமான விபத்தில் 70 பேர் உயிரிழந்தனர்.

2008 : கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டி.எம்.தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.

2010: ஆபிரிக்கக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றச்சென்ற டோகோ அணியின் வாகனம் மீது அங்கோலாவில்  ஆயுதபாணிகள் மேற்கொண்ட தர்க்குதலில் உதவிப் பயிற்றுநர், ஊடகவியலாளர், சாரதி ஆகிய மூவர் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments