Subscribe Us

header ads

கதிர்காமத்தில் புது வருட ஆசி பெற்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (31) இரவு சரித்திரப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்தில் உள்ள சகல மதஸ்தலங்களுக்கும் சென்று புதுவருட ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
 
 
கிரிவிகாரை,கதிர்காம தேவாயயம், மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல் ஆகிய மதஸ்தலங்களுக்குச் சென்ற ஜனாதிபதி அங்கிருந்த மத குருக்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
 
அங்கு சமய வழிபாடுகளுக்கு வந்திருந்த பொது மக்ளுடன் ஜனாதிபதி சினேகபூர்வமாக உரையாடினார்.
 
இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

president-at-kataragama-2
president-at-kataragama--3

president-at-kataragama--4

Post a Comment

0 Comments