Subscribe Us

header ads

அம்பதென்னை பள்ளிவாசல் மீது தாக்குதல்


மொஹொமட் ஆஸிக்

கண்டி பூஜபிட்டிய பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட அம்பதென்னை, முல்லேகம பிரதேசத்திலுள்ள மஸ்ஜிதுல் பலா பள்ளிவாசல் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகனமொன்றில் வந்த குழுவினரே பள்ளிவாசல் மீது கற்கள் வீசியதாவும் பின்னர் பள்ளிவாசலின் வாயிற் கதவை உடைத்து உள்ளே வந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதல் காரணமான பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் பள்ளிவாசலின் கட்டிடத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த பிரதேசத்தின் சிங்கள - முஸ்லிம் மக்கள் நீண்ட காலமாக ஒற்றுமையான வாழ்வதை சீர்குழைப்பதற்காக சிலர் திட்டமிட்டு இந்த செயலை செய்திருக்கலாம் என பிரதேசத்திலுள்ள பௌத்த தேரர்கள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் செய்தி கேள்வியுற்றதும் பிரதேசத்திலுள்ள பௌத்த தேரர்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்தனர். மத்திய மாகாண சபை உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ, பூஜாபிட்டிய பிரதேச சபையின் தலைவர் அனுர மடலுஸ்ஸ ஆகியோரும் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்துள்ளனர்.

மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.என்.பீ.அம்பன்வல தலைமையில் விஷேட பொலிஸ் குழு ஒன்று இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
TM



Post a Comment

0 Comments