முயல் வேட்டைக்குத் துப்பாக்கியுடன் சென்ற அரசாங்க உத்தியோகஸ்தர்கள் இருவரை
இரண்டு துப்பாக்கிகளுடன் கைது செய்துள்ள கற்பிட்டி கடற்படையினர், அவர்களை
மேலதிக விசாரணைக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை அதிபர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களில் ஒருவர் ஆசிரியர் என்பதுடன் மற்றையவர் சமுர்த்தி உத்தியோகஸ்தர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அத்துடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரு துப்பாக்கிகளும் அனுமதிப்பத்திரம் பெறப்பட்ட துப்பாக்கிகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, அவ்விடத்திலிருந்து துப்பாக்கியுடன் தலைமறைவாகிய பாடசாலை அதிபர் ஒருவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

1 Comments
Boss ithawida mukkimana pirchina nadakkuthu school la. atha podunga boss. sports meet la mannali poattutanuwo. pricipala matha poranuwo itha thedi pudinga boss
ReplyDelete