Subscribe Us

header ads

நாடோடிகளுக்கு விசேட அடையாள அட்டை

பாரம்பரிய மற்றும் கலாசார நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்காக இலங்கையிலுள்ள நாடோடிகளுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்க வன ஜீவராசிகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

'இலங்கையில் தெலுங்கு பேசும் நாடோடிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது. இவர்கள் தங்களது அன்றாட நடிவடிக்கைகளை எவ்விதத் தடைகளுமின்றி மேற்கொள்வதற்கு வசதியாகவும் கலாசார விதிமுறைகளுக்கு ஏற்பவும் இந்த விசேட அடையாள அட்டை வழங்கப்படும்' என்று வன ஜீவராசிகள் அமைச்சர் விஜித விஜேமுனி சொய்சா தெரிவித்தார்.

'இந்த அடையாள அட்டைகளை வைத்திருப்பதன் மூலம் அவர்கள் தங்களது விலங்குகளை எவ்வித இடையூறுமின்றி வைத்திருக்க முடியும்' என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

'இந்த அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக நாடோடிகள் தங்களது விண்ணப்பங்களை வன ஜீவராசிகள் அமைச்சுக்கு அனுப்ப வேண்டும்' என்றும் அமைச்சர் கூறினார்.

'அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாடோடிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக' அமைச்சர் மேலும் கூறினார்.

Post a Comment

0 Comments