Subscribe Us

header ads

கடலாமை பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக வந்திருந்த ஆஸி. யுவதி மீது அம்பலங்கொடவில் பாலியல் வல்லுறவு

அம்பலங்கொட மீன்பிடித்துறைமுகத்துக்கு அருகிலுள்ள கெந்தவானகல என்ற பாரிய கற்பாறையின் மீது அமர்ந்திருந்த 20 வயதான அவுஸ்திரேலிய யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 18 வயது இளைஞனைத் தேடி பொலிஸார் நடவடிககை மேற்கொண்டுள்ளனர்.

இந்த  யுவதி கடலாமை பாதுகாப்பு தொடர்பாக ஆராய்ச்சி செய்ய வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 ஆம் திகதி தமக்கு நெருங்கிய நண்பர்களுடனும் பிரதேச இளைஞர்களுடனும் உல்லாசமாக கெந்தவான கல பிரதேசத்துக்குச் சென்றுள்ளனர்.  அங்கிருந்த இளைஞரொருவர் மேற்படி யுவதியை  வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment

0 Comments