நடிகர்கள் பங்குகொள்ளும் செலிபிரட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League -
CCL) இம்முறை நான்காவது ஆண்டாக கடந்த 25ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமானது.
CCL) இம்முறை நான்காவது ஆண்டாக கடந்த 25ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமானது.
நடிகர்கள், நடிகைகள் இணைந்து ஆட்டம் பாட்டம் என அரங்கமே வண்ண மயமாக காட்சியளிக்கும் சி.சி.எல் தொடருக்கு வருடா வருடம் சினிமா ரசிகர்களினதும் கிரிக்கெட் ரசிகர்களினதும் ஆதரவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்தியாவிலுள்ள திரை நட்சத்திரங்கள் இணைந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மஹாராஸ்டிரா (பொலிவூட்), கர்னாடகா, மேற்கு வங்காளம், பீஹார், மஹாராஸ்டிரா (மராத்தி) ஆகிய 8 அணிகள் பங்குபெறும் இ20 தொடரினை இம்முறை இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கள் கடந்த 22ஆம் திகதி பல்வேறு நடிக நடிகைகளுடன் இணைந்து மும்பையில் அறிவித்தார்.
இத்தொடர் இந்தியாவிலும் டுபாயிலும் (2 போட்டிகள்) நடைபெறவுள்ளது. வார இறுதி நாட்களில் மட்டும் நடைபெறும் இத்தொடர் ஜனவரி 25 - பெப்ரவரி 23 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
இத்தொடரின் முதற்போட்டி நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மும்பையில் நடைபெற்றது. வழக்கம்போல தங்களது அபிமான நட்சத்திரங்களை காண ரசிகர்கள் குவிந்தனர். இதில் இரு முறை சி.சி.எல் சம்பியன் பட்டம் வென்றுள்ள நடிகர் விஷால் தலைமையிலான சென்னை ரைரோஸ் அணியும் சுனில் ஷெட்டி தலைமையிலான மும்பை ஹீரோஸ் அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை ஹீரோஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களைப் பெற்றது. அதிகூடுதலாக அப்டாப் ஷிவ்டஸனி 59 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 83 ஓட்டங்களைக் குவித்தார்.
பந்துவீச்சில் விஷால் மற்றும் விக்ராந்த தலா இரு விக்கெட்களை வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய சென்னை ரைனோஸ் அணி பிரித்வி மற்றும் ஷரன் ஆகியோரின அதிரடியில் 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்களால் வெற்றி பெற்றது.
பிரித்வி 22 பந்துகளில் 42 ஓட்டங்களையும் ஷரன் 23 பந்துகளில் 36 ஓட்டங்களையும் குவித்தார். விஷால் (23), விக்ராந்த் (23), ஜீவா (20), விஸ்னு (16) ஆகியோரும் வெற்றிக்குப் பங்களித்தனர். பந்துவீச்சில் மும்பை அணியின் வருண் படோலா 2 விக்கெட்களை வீழ்த்தினார். போட்டியின் ஆட்டநாயகனாக ஷரன் தெரிவானார்.
மற்றுமொரு போட்டியில் வீர் மராத்தி (151/7, 20ஓவ.) அணியை 80 ஓட்டங்களினால் வீழ்த்திய போஜ்பூரி தபாங்ஸ் (230/3, 20ஓவ.) அணி அபார வெற்றி பெற்றது. நேற்று கேரளா எதிர் தெலுங்கு மற்றும் கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன.

0 Comments