Subscribe Us

header ads

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளைப் பெற்ற பாகிஸ்தான் தாய்

பாகிஸ்தானைப் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வழக்கமான பரிசோதனைகளுக்காக கைபர் பக்துன்ஹ்வா மாவட்டத்தின் பன்னு நகரிலுள்ள தனியார் வைத்தியாலைக்குச் சென்றபோதே இப்பிரசவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை இடம்பெற்றுள்ளது.

இதன்போது 4 பெண் குழந்தைகளும் 2 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளது. தற்போது தாயும் பிள்ளைகளும் நலமாக உள்ளனர்.

இருப்பினும் மேலதிக அவதானிப்புகளுக்காக பன்னு நகரிலுள்ள இராணுவ வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments