Subscribe Us

header ads

மூக்குப்பொடி பழக்கத்தால் பலியான இளம் கர்ப்பிணி பெண்

மூக்குப்பொடியை வாயில் பற்களுக்கு இடையே வைக்கும் பழக்கம், கர்ப்பிணியின் உயிரைப் பறித்தது. திண்டுக்கல், குரு நகரை சேர்ந்தவர் சக்திவேல்.

இவரது மனைவி கவுசல்யா (19). இவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். கவுசல்யா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இவருக்கு மூக்குப்பொடியை வாயில் பற்களுக்கு இடையே வைக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி இச்செயலில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 4ம் திகதி இரவு கவுசல்யா வழக்கம் போல் மூக்குப்பொடியை எடுத்து வாயில் வைத்தார்.

பொடியின் காரம் தாங்காமல் இவருக்கு தும்மல் ஏற்பட்டது. தொடர்ந்து தும்மிய இவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து இவரது தாயார் முருகேஸ்வரி திண்டுக்கல் தெற்கு பொலிசில் புகார் செய்தார். கர்ப்பிணி ஒருவர், மூக்குப்பொடி போடும் பழக்கத்தால் உயிரிழந்த சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணமான ஒன்றரை ஆண்டில் கவுசல்யா இறந்துள்ளதால், ஆர்டிஓ விசாரணை நடக்கிறது.

Post a Comment

0 Comments