2015
ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு ஓர் ஆண்டே உள்ள நிலையில், புதிய
வீரர் ஒருவரை அணித் தலைவராக நியமிப்பது அவர் மீதான பணிப் சுமையை
அதிகரிக்கும் என தோனி கூறியுள்ளார்.
உலக கிண்ண தொடருக்கு முன்னர் 70
தொடக்கம் 80 போட்டிகளிலாவது விளையாடியிருந்தால் மாத்திரமே, புதிய தலைவரால்
சிறப்பாக செயற்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போட்டியில்
தொடர்ந்தும் விளையாடுவதை கருத்தில் கொண்டு, போட்டி வகையொன்றின்
தலைமைத்துவதை கைவிடுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே
அவர் இதனைக் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஊக்குவிப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு, மஹேந்திர சிங் தோனி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


0 Comments