Subscribe Us

header ads

மட்டுக்கலை சிறுவனின் மரணத்தில் சந்தேகம்: நீதியான விசாரணைக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் கடந்த 27அம் திகதி காணமால் போன அந்தனி ரொபட் எனும் பாடசாலை சிறுவனின் சடலம் 28அம் திகதி அப்பகுதியில் உள்ள குளத்திலிருந்து மீட்கப்பட்டது. 
 
குறித்த சிறுவனின் சடலம் நுவரெலியா மாவட்ட நீதிபதியின் முன்னால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்கு பின் சடலம் சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 
சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறி இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் இன்று வியாழக்கிழமை  தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியின் மட்டுக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்லும் வீதியின் சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Post a Comment

0 Comments