Subscribe Us

header ads

சிலாபம் பொலிஸ் பிரி­வில் 2013 இல் 62 பாலியல் சம்­ப­வங்­கள்

சிலாபம் பொலிஸ் பிரிவினுள் கடந்த 2013ஆம் வருடத்தின் முதல் பத்து மாதத்தினுள் மாத்திரம் 62 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சிலாபம் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் தெரிவித்தனர். 
 
இப்பிரிவில் கடந்த 2012ம் வருடத்தில் இவ்வாறான குற்றச் செயல்கள் 72 இடம்பெற்றிருந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களைக் குறைக்கும் நோக்கில் சிலாபம் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் சாலிய த சில்வாவின் தலைமையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரியவர்களைத் தெளிவு படுத்தும் பல்வேறு செலமர்வுகள் கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்டன. 
 
பல்வேறு தொண்டர் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களுடன் இவ்வாறான நடவடிக்கைகள் சிலாபம் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
 
கடந்த வருடத்தில் 18 வயதுக்கு குறைந்த சிறுமிகளை வல்லுறவுக்கு உட்படுத்திய 35 சம்பவங்கள் கடந்த வருடம் முதல் பத்து மாதங்களினுள் இடம்பெற்றுள்ளன. இவை சிலாபம் பொலிஸ் பிரிவினுள் 12, மாராவில பிரிவில் 8, வென்னப்புவ பிரிவில் 2இ மாதம்பை பிரிவில் 4, தங்கொட்டுவ பிரிவில் 6, கொஸ்வத்தை பிரிவில் 3 என்ற அடிப்படையில் இக்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இக்குற்றங்களுடன் தொடர்புடைய 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இக்காலப்பிரிவினுள் மோசமான பாலியல் வல்லுறவுச்சம்பவங்கள் 13 இடம்பெற்றுள்ளன. சிலாபத்தில் 3, மாராவிலயில் 2, வென்னப்புவவில் 7 மற்றும் மாதம்பையில் 1 என இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
 
பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவங்கள் சிலாபத்தில் 5, மாராவிலயில் 3, வென்னப்புவவில் 5, தங்கொட்டுவவில் 4, கொஸ்வத்தையில் 1 என 18 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

Post a Comment

0 Comments