1606 - இங்கிலாந்து மன்னன் முதலாம் ஜேம்ஸுக்கு எதிராகவும் நாடாளுமன்றத்துக்கு எதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக கய் ஃபொக்ஸ் தூக்கிலிடப்பட்டான்
1747 - பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
1876 - அனைத்து இந்தியப் பழங்குடிகளும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு செல்லுமாறு ஐக்கிய அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
1891: போர்த்துக்கலை குடியரசாக்குவதற்கான கிளர்ச்சி ஏற்பட்டது.
1915 - முதலாம் உலகப் போரில் ரஷ்யாவுக்கெதிராக ஜெர்மனி பாரியளவு நச்சு வாயுவைப் பயன்படுத்தியது.
1937 - சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கி ஆதரவளர்கள் 31 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1943: 2 ஆம் உலகப் போரின்போது ஜேர்மனிய இராணுவத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான பீல்ட் மார்ஷல் பிரெட்ரிக் பௌலஸ் சோவியத் படைகளிடம் சரணடைந்தார்.
1944 - இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் வசமிருந்த மார்ஷல் தீவுகளில் அமெரிக்கப் படைகள் தரையிறங்கின.
1946 - யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு அந்நாடு பொஸ்னியா ஹேர்சகோவினா, குரோஷியா, மக்கெடோனியா, மொண்டெனேகுரோ, சேர்பியா மற்றும் சிலவேனியா என ஆறு குடியரசுகளாகப் பிரிக்கப்பட்டது.

1958 - ஐக்கிய அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதி எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1961 - நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1968 - வியட்நாம் போரில் வியட் கொங் படைகள் சாய்கொன் நகரில் அமெரிக்க தூதராலயத்தைத் தாக்கின.
1968 – நவுறு, அவுஸ்திரேலியாவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதாக பிரகடனம் செய்தது.
1980 - குவாத்தமாலாவில் ஸ்பெயின் தூதராலய முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.
1995: மெக்ஸிகோவின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவற்காக 2000 கோடி டொலர் கடன் வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் அனுமதித்தார்.
1996 – கொழும்பில் இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.
2000: அமெரிக்காவில் பசுபிக் சமுத்திரத்தில் விமானமொன்று வீழ்ந்ததால் 88 பேர் பலியாகினர்.
2003 - அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
2009: கென்யாவில் எண்ணெய் கசிவொன்றையடுத்து இடம்பெற்ற தீவிபத்தில் 113 பேர் உயிரிழந்தனர்.
2010: உலகில் 200 கோடி டொலர் வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமையை 'அவதார்' பெற்றது.
2013: மெக்ஸிகோவில் 214 மீற்றர் உயரமான கட்டடமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் 33 பேர் உயிரிழந்தனர்.

0 Comments