Subscribe Us

header ads

உலக சாதனை மெய்வல்லுனர் சட்டவே காலமானார்

5000 மீற்றர் ஒட்டத்தில் உலக சாதனையை தம் வசம் வைத்திருந்த பிரித்தானியாவின் முன்னாள் மெய்வல்லுநர் சேர் கிறிஸ் சட்டவே ( Sir Chris Chataway) காலமாகியுள்ளார்

இரண்டரை ஆண்டுகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சட்டவே தனது 82 வயதில் இயற்கை எய்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1954ஆம் ஆண்டு லண்டன் வைட் சிட்டி அரங்கில் 5000 மீற்றர் ஒட்டத்தில் அவர் உலக சாதனையை நிலைநாட்டியிருந்தார்.
அதே ஆண்டு பொதுநலவாய போட்டிகளில் மூன்று மைல் தூர ஒட்டத்திலும் வெற்றிபெற்றிருந்தார்.

மேலும் பி.பி.சியின் முதலாவது விளையாட்டு ஆளுமைமிக்க வீரராக 1954 ஆம் ஆண்டு அவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
1995 ஆம் ஆண்டு விமானப் போக்குவரத்து சேவைகள் துறையில் சேர் பட்டத்தை அவர் பெற்றிருந்தார்.

தொலைகாட்சி செய்தி வாசிப்பாளராகவும் 1959 ஆம் ஆண்டு தொடக்கம் 1966 ஆம் ஆண்டு வரை கென்சவேட்ரீவ் கட்சி உறுப்பினராகவும் ச்ட்டவே பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add caption

Post a Comment

0 Comments