நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சகோதரி நான் என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். ஹிருனிகா மத்திய கொழும்பு ஆளும் கட்சி இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வளர்ப்பு மகள். எனது எதிர்காலம் சவால் மிக்கதாக அமையும். எல்லா சவால்களையும் எதிர்நோக்கத் தயார்.
தந்தை பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலையாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் வரையில் அமைதியாக மாட்டேன். தந்தையின் கொலையாளிகளை பார்க்கும் போதெல்லாம் என்னும் சொல்ல முடியாத வேதனை எழுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.youtube.com/watch?v=mwHzuO6eWKo&noredirect=1

0 Comments