Subscribe Us

header ads

பல இலட்ச ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிப்பு

நீர்கொழும்பு தளுபத்த பகுதியில் 14,45,000 ரூபா பெறுமதியான போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

21 மற்றும் 23 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போலி 5,000 ரூபா நாணயத்தாள் வைத்திருந்த ஒருவர் நேற்று பிற்பகல் தளுபத்த பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 288 போலி 5,000 ரூபா நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Post a Comment

0 Comments