Subscribe Us

header ads

மோட்டார் படகில் கல்லறைக்கு பயணம்

நபரொருவரின் இறுதி ஆசையை நிறைவேற்ற அவரது சடலம் மோட்டார் படகொன்றில் வைக்கப்பட்டு வண்டியொன்றின் மூலம் மயானத்துக்கு நல்லடக்கத்திற்காகக் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

பென்சில்வேனிய மாநிலத்தின் தலைநகரான ஹரிஸ்பேர்க்கின் தெற்கே சுமார் 30 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மவுண்ட் வூல்ப் பிராந்தியத்தைச் சேர்ந்த ரொனால்ட் புளொஸ் (78 வயது) என்பவரது மரண ஊர்வலமே இவ்வாறு வித்தியாசமான முறையில் இடம்பெற்றது.
 
முன்னாள் கடற்படை வீரரான ரொனால்ட் தனது பெருமளவான பொழுதை ஆறுகளில் படகுச் சவாரி மேற்கொண்டு மீன் பிடிப்பதிலும் வேட்டையாடுவதிலும் கழித்து வந்தார்.
 
 
இந்நிலையில், அவர் தனது இறுதி ஆசையாக 'மீன்பிடிக்கச் செல்கிறார்' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட மோட்டார் படகொன்றில் தனது பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என தனது குடும்பத்தினரைக் கோரியிருந்தார்.
 
இதனையடுத்து மரணமான அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மோட்டார் படகு அவரது ஐந்து மகன்மாரில் ஒருவரால் ட்ரக் வண்டியொன்றின் மூலம் மயானத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.
 

Post a Comment

0 Comments