ஆஸ்திரியாவைச் சேர்ந்த திகில் விரும்பியொருவர் தரையிலிருந்து
100 அடி உயரத்தில் கட்டப்பட்ட கம்பி இணைப்பொன்றில் நடந்து சென்று அதன்
மத்தியில் அமைக்கப்பட்டிருந்த படுக்கையில் உறங்கி அந்த வழியாக சென்ற
பாதசாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ஐகொர் ஸ்கொட்லான்ட் என்ற மேற்படி நபர் வியன்னாவில் ஹோஸ் டி மீரெஸ் மிருகக்காட்சிசாலையில் பொது நீர் அருங்காட்சியகத்திலுள்ள கட்டடத்துக்கும் பிறிதொரு கட்டடத்துக்குமிடையே வீதிக்கு மேலாக அந்தரத்தில் அமைக்கப்பட்டிருந்த தொங்கு படுக்கையில் உறங்கியே இவ்வாறு சாகஸம் செய்துள்ளார்.
ஸ்கொட்லான்ட் அந்த தொங்கு படுக்கையில் சுமார் 12 மணித்தியாலங்களை கழித்துள்ளார்.
மலை ஏறும் வீரரான அவர் வியன்னா சிலக்லைனர்ஸ் எனும் உயரமான இடங்களில் ஏறும் குழுவில் அங்கத்துவம் வகிக்கிறார்.
ஸ்கொட்லான்ட் மேற்படி சாகஸத்தை மேற்கொள்ளும் காட்சியை புகைப்படக்கலைஞரான செபஸ்ரியன் வஹ்ல்ஹிட்டா கட்டடமொன்றின் கூரையிலிருந்தவாறு புகைப்படமெடுத் துள்ளார்.

0 Comments