Subscribe Us

header ads

இந்திய துணைத்தூதுவர் தேவயாணி நிர்வாணப்படுத்தப்பட்டு சோதனையிடப்பட்ட காட்சி என போலி வீடியோ இணைத்தில் அமெரிக்கா கண்டனம்

அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய துணைத் தூதுவர் தேவயாணி கோப்ரகடேவை அமெரிக்கப் பொலிஸார் நிர்வாணப்படுத்தி சோதனையிடும் காட்சித் தெரிவித்து இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ போலியானது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தனது பணிப்பெண்ணுக்கான விசா விண்ணப்பத்தில் போலியான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டின்போரில் அமெரிக்கப் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளால் கடந்த மாதம் தேவ்யாணி கோப்ரகடே  கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

 ராஜதந்திர விதிவிலக்குகளை கருத்திற்கொள்ளாமல் அவர் கைது செய்யபட்டதாக இந்தியாவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதேவேளை அமெரிக்கப் பொலிஸ் நிலையத்தில் வைத்து தன்னை நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதாக 39 வயதான தேவ்யாணி கோப்ரகடே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் நிர்வாணப்படுத்தப்பட்டு சோதனையிடப்பட்டபோது கண்காணிப்பு கெமராவில் பதிவுசெய்யப்பட்ட வீடியோ எனத் தெரிவித்து வீடியோ பதிவொன்று இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது. தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்ணொருவரின் ஆடைகளைக் களைந்து சோதனையிடப்படுவதுடன் பெண்ணொருவரர் அழும் ஒலியும் அந்த வீடியோவில் உள்ளது.

ஆனால் இது தேவயாணி கோப்ரகடே தொடர்பான வீடியோ அல்ல அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் தேவயாணி விவகாரத்துடன் தொடர்புபடுத்தி இந்த வீடியோ வெளியிடப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த வீடியோவில் உள்ள நபர்கள் மார்ஷல் எனும் சட்ட அமுலாக்கல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் அல்ல எனவும் அதிலுள்ள சோதனைமுறை அமெரிக்க மார்ஷல்   உத்தியோகஸ்தர்கள் பின்பற்றும்சோதனைமுறையல்ல எனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்கத்தின் பேச்சாளர் மேரி ஹேர்வ் கூறியுள்ளார்.  இந்த வீடியோ வெளியிட்டப்பட்டமை ஆபத்தான பொறுப்பற்ற நடவடிக்கை எனவும் இதை தாம் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments