நாட்டின் வடக்கு பகுதியை நோக்கி கடும் காற்று வீசுவதால் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என தெரிவித்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இப் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ
மீற்றருக்கு காற்று வீசக் கூடும் எனவும் இதனால் இப்பகுதிகளில் கடல்
பகுதியிலிருந்து 100 மீற்றருக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களை
வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


0 Comments