Subscribe Us

header ads

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களான மேட் பிரையரும், ஸ்டுவர்ட் பிராடும் சிட்னியில் உள்ள ஒரு அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள டார்லிங் ஹார்பர் பகுதியின் மேம்பாலத்தில் நின்ற அடையாளம் தெரியாத நபர், தனது செல்போன், பர்ஸ் மற்றும் பாஸ்போர்ட்டை ஆற்றில் வீசினார். பின்னர் தானும் பாலத்தின் முனையில் நின்று ஆற்றில் குதிக்க தயாரானார். அப்போது அங்கு வந்த வீரர்கள் இருவரும், லாவகமாக பேசி அவரை பாலத்திற்கு மேலே அழைத்து வந்தனர்.

அதே சமயத்தில் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆன போதும் கூட பொறுமையாக அந்த நபரிடம் பேச்சு கொடுத்து காலம் கடத்தி வந்துள்ளனர். காவல்துறையினர் வந்தவுடன் அவரை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இங்கிலாந்து வீரர்களின் இந்த உயிர் காக்கும் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் பிரையர் இது குறித்து கூறும்போது ‘எங்கள் நிலையில் யாராக இருந்தாலும் அவர்களும் இதுபோன்றே செயல்பட்டிருப்பார்கள்’ என தன்னடக்கமாக கருத்து கூறியுள்

Post a Comment

0 Comments