(JM)உலகம் முழுவதும் இன்று நகரங்கள் பெருவளர்ச்சி அடைந்து வருகின்றன. நகரங்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் நிர்வாகங்கள் திணறி வருகின்றன. நாட்டின் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு வகையான உத்திகளை பயன்படுத்தி வாகன நெரிசலை சமாளிக்க முயல்கின்றன. அரபுநாட்டின் நகரான சார்ஜா நிர்வாகம் வாகன நிறுத்தங்களை சமாளிக்க புதிய உத்தி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து சார்ஜா நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘வாகனங்களை தங்களுக்கு தேவையான இடத்தில் நிறுத்திக் கொள்வதற்கு முன்பதிவு வசதியை அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தை நிறுத்த வேண்டிய இடத்தை குறிப்பிட்டு நிர்வாகம் அறிவித்துள்ள எண்ணுக்கு தங்களது வாகன நம்பரை எஸ்எம்எஸ் அனுப்பினால் பார்க்கிங் வசதி செய்து தரப்படும். குறிப்பிட்ட கால கெடுவை தாண்டியும் வாகனம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவில்லை என்றால் பத்து நிமிடத்தில் நினைவூட்டு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.
அதில் தங்களது காலத்தை நீட்டிப்பு செய்து கொள்ள என் என்ற எழுத்தை பதிலாக அனுப்பினால் மேலும் காலஅவகாசம் தரப்படும். இவ்வாறு ஒதுக்கப்பட்ட வாகன பார்க்கிங் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றிற்கு வாகன உரிமையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த நடைமுறை நேற்றுமுதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், அரபு நாடுகளின் பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு முன்பதிவு அவசியம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments