Subscribe Us

வரதட்சினையை ஒழிக்க இந்திய முஸ்லிம் அறிஞர்கள் முயற்சி!

A.J.M மக்தூம்
இந்தியாவின் வடக்கு மாநிலமான பீகாரில் முஸ்லிம் அறிஞர்கள் குழு ஒன்று திருமணத்தின் போது பெண்கள் வழங்கும் வரதட்சினையை ஒழித்துக் கட்ட திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் முதல் கட்ட நகர்வாக அது தொடர்பான கவலையளிக்கும் சமூக தீமைகளை சுட்டிக்காட்டி, வரதட்சினை கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் எந்த திருமண ஒப்பந்தங்களிலும் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இமாறதே ஷரீஆ எனும் இஸ்லாமிய அமைப்பின் தலைவர் காஸி மௌலானா மன்சூர் ஆலம் மேற்படி தமது திட்டத்தை டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு வழங்கிய பேட்டியில் உறுதி படுத்தியுள்ளார்.
இது வரதட்சிணையை ஒழித்துக்கட்டவும், விழிப்புணர்வு ஊட்டவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படும் அதேவேலை வரதட்சினை எடுப்போருக்கு எதிரான சமூகப் புறக்கணிப்பாகவும் கருதப் படுகிறது.
திருமணத்தின் போதுமணமகன் மணமகளுக்கு “மஹர்” என்று ஒரு தொகையையோ, பொருளையோ வழங்குவதே இஸ்லாமிய முறை என்பதால், குறித்த நடவடிக்கையானது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பரவலாக ஆதரவை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments