வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3–வது ஒருநாள் போட்டி குயன்ஸ்டவுனில் இன்று நடந்தது. மழையால் ஆட்டம் 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பிராவோ நியூசிலாந்தை முதலில் விளையாட அழைத்தார்.
நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் இந்த போட்டியில் புதிய உலக சாதனை படைத்தார். 36 பந்தில் அவர் செஞ்சூரி அடித்து அப்ரிடியின் சாதனையை முறியடித்தார். பாகிஸ்தான் வீரர் அப்ரீடி 1996–ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான நைரோபியில் நடந்த போட்டியில் 37 பந்தில் சதம் அடித்தே சாதனையாக இருந்தது.
அவரது 18 ஆண்டு கால சாதனையை கோரி ஆண்டர்சன் புத்தாண்டு தினமான இன்று முறியடித்தார். அவரது சதத்தில் 12 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.
இந்தப்போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசி ரைடரும் சதம் அடித்தார். அவர் 46 பந்தில் 12 பவுண்டரி, 5 சிக்சருடன் 100 ரன்னை தொட்டார்.
நிர்ணயிக்கப்பட்ட 21 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 283 ரன் குவித்தது. கோரி ஆண்டர்சன் 47 பந்தில் 6 பவுண்டரி, 14 சிக்சருடன் 131 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ரைடர் 51 பந்தில் 12 பவுண்டரி, 5 சிக்சருடன் 104 ரன் எடுத்தார்.



0 Comments