தொலைபேசி கட்டணம் இன்று முதல் மேலும் 5 வீதம் அதிகரிக்கப்படுமென தொலை தொடர்பு ஒழுங்கு படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.தொலை பேசி மற்றும் கையடக்க தொலைபேசி ஆகிய இரு வகையான தொலைபேசிகளின் கட்டணங்களும் இவ்வாறு அதிகரிக்கப்படுகின்றன. இதன்படி இதுவரைகாலமும் அறவிடப்பட்டு வந்த நூற்றுக்கு 20 வீத வரி விகிதம் 25 வீதமாக அதிகரிக்கப்படுகிறது.
தொலைபேசி அழைப்புகளுக்கு மாத்திரமே இந்த கட்டண அதிகரிப்பு அமுல் நடத்தப்படும் எனவும் (Download) பதிவிறக்கம் குறித்து 10வீத வரியைத்தவிர வேறு மேலதிக கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது எனவும்; பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட மேலும் தெரிவித்தார்.

0 Comments