John Matheson, 1961ஆம் ஆண்டு முதன்முதலாக எம்.பியாக
தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் தொடர்ந்து மூன்று முறை எம்.பி
தேர்தலில் வெற்றி பெற்றார். இரண்டாம் உலகப்போரில் கலந்துகொண்ட John
Matheson, கடந்த சனிக்கிழமை உடல்நலம் சரியின்றி திடீரென மரணம் அடைந்தார்.
அவருடைய மரணம் கனடிய நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என இன்று பிரதமர்
ஹார்ப்பர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள கனடிய கொடியை வடிவமைக்க காரணமாக இருந்தவரும் John Matheson என்பது குறிப்பிடத்தக்கது.
1917ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி பிறந்த John Matheson, கனடாவில்
பிரபல வழக்கறிஞராகவும், பின்னர் நீதிபதியாகவும் பணிபுரிந்தவர். அரசியலுக்கு
வந்த பின்னர் நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.
இவருக்கு Edith Bickley என்ற மனைவியும் ஆறு மகன்களும் உள்ளனர். 97வது
வயதில் காலமான John Matheson அவர்களின் இறுதிச்சடங்கு இன்று கனடாவில்
அவரது சொந்த ஊரில் நடைபெற உள்ளது. கனடாவின் முக்கிய அரசியல் தலைவர்கள்
இதில் கலந்துகொள்ள உள்ளனர்.


0 Comments