Subscribe Us

header ads

மாம்பழக் கடைக்காரருடன் ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்தது

      உடவலவ - பெரியல் சந்தியில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

இவர் பதலங்கல - குடிகல பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவராவார். 

நேற்றையதினம் (01) குறித்த நபர் கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற பூஜை ஒன்றில் கலந்துகொண்டு திரும்பிய போது, மாம்பழக் கடை உரிமையாளர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளார். 

இதன்போது படுகாயமடைந்த இவர், எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு நேற்றையதினம் (01) எம்பிலிபிடிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

இதன்போது இவரை எதிர்வரும் 10 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

அத தெரண

Post a Comment

0 Comments