மன்னார்
மனித புதைகுழியில் இருந்துதொடராக மனித எச்சங்கள்
மீட்கக்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் குறித்த வீதி உடைக்கப்பட்டு கனரக
இயந்திரங்கள் கொண்டு முழுமையாக தோண்டும் பணி தொடங்கியுள்ளது.
மன்னார் திருக்கேதிஸ்வரம் மனித புதை குழி விவகாரம்-வீதி தோண்டும் பணி
மீண்டும் ஆரம்பம்.மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி
மீண்டும் நேற்று(20) திங்கட்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில்
தோண்டப்பட்டுள்ளது.
09 ஆவது தடவையாக கடந்த சனிக்கிழமை(18-01-2014) மன்னார் நீதவான் ஆனந்தி
கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்ட போது மேலும் மூன்று மனித
எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக கடந்த சனிக்கிழமை
(18-01-2014) காலை 8.30 மணி முதல் காலை 11 மணிவரை குறித்த மனித புதைகுழி
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர்
டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் தோண்டப்பட்டது.
இதன் போது 3 மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டது.நேற்று
முந்தினம் சனிக்கிழமை வரை 40 எழும்புக்கூடுகள் கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று (20-01-2014) திங்கட்கிழமை காலை
8.30 மணிமுதல் மதியம் 1 மணி வரை குறித்த மனித புதை குழி மன்னார் நீதவான்
ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் மீண்டும் தோண்டப்பட்டது.
இதன் போது ஏற்கனவே தோண்டப்பட்ட பகுதியில் இருந்து குறித்த வீதி முழுமையாக
உடைக்கப்பட்டு,மனித புதை குழி விஸ்தரிக்கப்பட்டு மேலும் தோண்டப்பட்டது.இதன்
போது குறித்த மனித புதை குழியில் இருந்து புதிதாக மேலும் மனித எச்சங்கள்
பல உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதி போக்குவரத்திற்காக மூடப்பட்டு தற்போது காவல்துறை
பாதுகாப்புடன் தோண்டப்பட்டு வருகின்றது. மீண்டும் நாளை செவ்வாய்க்கிழமை
குறித்த புதை குழி தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.மீண்டும் இன்று
செவ்வாய்க்கிழமை (21-01-2014) மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த மனித
புதை குழி தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





0 Comments