Subscribe Us

header ads

M.RISLAN தேசிய மட்ட திறமைக்கான விருதினை தம் வசப்படுத்திக் கொண்டார்... (படங்கள் இணைப்பு)

(தகவல் :H.N.C)
சுற்றாடல் முன்னோடி மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட பாடசாலை மட்டட்தினில் நட்புறவுள்ள பசுமை கருத்திட்டப் போட்டியில் கல்பிட்டிHNC மாணவர் கழகத்தின் உறுப்பினரும்  அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மாணவன் தேசிய மட்ட திறமைக்கான விருதினை வென்றுள்ளார்.

 மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்புணர்வு பிரிவினால் 2013அம் வருட உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் முன்னோடி மாணவர்களுக்காக இப்போட்டி நடாத்தப்பட்டது.

 க.பொ.த சதாரண தரத்தில் கல்வி கற்கும் இவர் தரம் 6 முதல் சுற்றாடல் முன்னோடி கழக உறுப்பினராக இருந்து  செயற்பட்டு  வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிட தக்கது.

 சுற்றாடல் கழகத்தின் மஞ்சள் பச்சை வெள்ளை  ஆகிய  பதக்கங்களை பெற்றுள்ளார். ஜனாதிபதி பதக்கத்தினை பெறுவதற்கான செயல்திட்டங்களை முன்னொடுத்து வருகிறார்.

 இயற்கையாக பசலையை தயாரித்து தமது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். செயற்பாட்டை மேற்பார்வை செய்வதற்காக அதிகாரிகள் சென்ற போது இயற்கை பசளை தயாரிக்கும் தமது செயற்பாடுகளை தெளிவு படுத்தினார். 

கற்பிட்டி எம்.சருபுதீன் மீன் தொழில் செய்யும் இவரின் மகனுமாவார் என்பதும் குறிப்பிட தக்கது .இவர் கற்பிட்டி புதுக்குடியிருப்பை சேர்ந்தவரும் ஆவார்.

இவரின் இத்திறமைக்கு KV சார்பாகவும் , கற்பிட்டி சார்பாகவும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.













Post a Comment

0 Comments