Subscribe Us

header ads

சொகுசு பஸ்களில் காதல் சல்லாபம் புரிந்த 5 மாணவ ஜோடிகள்:நடத்துனர்களுக்கு மேலதிக கட்டணம் செலுத்துவதாக தெரிவிப்பு

கண்டி - மாத்தளை சொகுசு பஸ்களில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து இளம் ஜோடிகளை கைது செய்ததாக மாத்தளை தலைமை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு கைது செய்யப்பட்ட இளம் ஜோடிகள் கண்டி நகரில் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர் மாணவிகள் என பொலிஸாருக்கு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கண்டி - மாத்தளை சொகுசு பஸ்வண்டிகளில் பயணிப்போர் இவ்வாறான செயல்பாடுகளைக் கண்டு அதிருப்தியுடன் பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களையடுத்து மாத்தளை பொலிஸார் இப் பஸ்வண்டிகளில் திடீர் சோதனைகளை நடத்தி இவ்வாறு நடந்து கொண்ட காதல் ஜோடிகளை கைது செய்தனர்.

இவர்களை பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய போது கண்டி நகர மேலதிக வகுப்புகளுக்கு வரும் தாங்கள் காதல் காரணமாக இவ்வாறு பஸ்களில் நடந்து கொள்வதாகவும் சில பஸ் நடத்துநர்களுக்கு பஸ்கட்டணத்தை விட மேலதிக கட்டணம் வழங்கி தங்களுக்கான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். பொலிஸார் இவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்ட பின்னர் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments