கொடுத்து
பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சித்த 12 வயது சிறுவன் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் நேற்று போலி நாணத்தாளை கொடுத்தபோது வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளர் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
சந்தேகநபரான
சிறுவன் நேற்று முன்தினமும் அதே வர்த்தக நிலையத்தில் போலி 500 ரூபா
நாணயத்தாளை கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
சிறுவனிடம்
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது வட்டகொடை நகரை அண்மித்த தேயிலை
தோட்டத்திற்கு அருகே மறைத்து வைக்கப்டப்டிருந்த 10 போலி ஆயிரம் ரூபா
நாணயத்தாள்களும், நான்கு போலி 500 ரூபா நாணயத்தாள்களும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமது மாமனார் குறித்த இடத்தில்
நாணயத்தாள்களை மறைத்து வைப்பதை கண்காணித்த தாம் அதிலிருந்து இரண்டு
நாணயத்தாள்களை எடுத்ததாக சந்தேகநபரான சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலி நாணத்தாள்களை மறைத்து வைத்தவர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
சந்தேகத்தின்
பேரில் கைது செய்யப்பட்ட சிறுவன் இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments