
போட்டியில், தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 232 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
மிர்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை, பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
பங்களாதேஷ் அணி ஓர் கட்டத்தில் 59 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டினை எதிர்நோக்கியிருந்தது.
எனினும்
5ஆவது விக்கெட்டுக்காக இணைந்த அணித் தலைவர் முஸ்பீகூர் ரஹீம் மற்றும்
ஷகிப் அல் ஹசன் ஜோடி 96 ஓட்டங்களைப் பெற்று அணியை வலுவான நிலைக்கு
இட்டுச்சென்றனர்.
ஷகிப் அல் ஹசன் 55 ஓட்டங்களையும், முஸ்பீகூர் ரஹீம் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சமிந்த எரங்க 4 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மல் விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை முதல் நாள் முடிவில் விக்கெட்டு இழபின்றி 60 ஓட்டங்களை பெற்றுள்ளது.
0 Comments