அனுராதபுரம் கெக்கிராவ பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 18 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 7.15 அளவில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் வீதியை விட்டு
விலகி வாகை மரத்திலும், மின் கம்பத்திலும் மோதியுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயடைந்த மாணவர்கள் கெகிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
படங்கள்: News First
0 Comments