நாடளாவிய
ரீதியில் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 02 ஆம் திகதியான
வியாழன் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட
சோதனையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 2 ஆயிரத்து 392 சாரதிகளை
பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகருமான அஜித் ரோஹண கேசரிக்குத் தெரிவித்தார்.
அத்துடன் ஜனவரி மாதம் முதலாம் திகதி 6 மணி தொடக்கம் வியாழன் காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்திற்குள் குடிபோதையில் வாகனம் செலுத்திய 253 சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன் பிரகாரம் 10 பேருந்து வண்டி சாரதிகளும் ஆயிரத்து 214 மோட்டார் சைக்கிள் சாரதிகளும் 887 முச்சக்கரவண்டி சாரதிகளும் மற்றும் ஏனைய வாகன சாரதிகள் 281 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை ஜனவரி முதலாம் திகதி காலை 6 மணி தொடக்கம் வியாழன் காலை 6 மணி வரையிலான 24 மணி நேரங்களில் 2 பேருந்து வண்டி சாரதிகளும் 130 மோட்டார் சைக்கிள் சாரதிகளும் ௮௫ முச்சக்கர வண்டி சாரதிகளும் மற்றும் ஏனைய வாகன சாரதிகள் 36 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 2 ஆயிரத்து 392 பேரிற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

0 Comments