கொழும்பு, காலி முகத்திடலில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின்
கை
மற்றும் வயிற்றுப் பகுதியைக் கடித்துவிட்டு அங்கிருந்து ஓட முற்பட்ட இளைஞர்
ஒருவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு
கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலி முகத்திடலில்
நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் பாகங்களை திருடிக்கொண்டிருந்த போது
மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள், சந்தேகநபரை கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
இருப்பினும், தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேகநபர், கான்ஸ்டபிளின் கையையும்
வயிற்றுப் பகுதியையும் கடுமையாகக் கடித்துள்ளார். இந்நிலையில் கைது
செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன்
இன்று நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேகநபருக்கு ஏதேனும் தொற்று நோய் உள்ளதா என்பது தொடர்பில் அறிவதற்காக
நீதிமன்ற வைத்திய அதிகாரி ஒருவரிடம் முன்னிலைப்படுத்தி இரத்த மாதிரி
பரிசோதனையொன்றுக்கு உட்படுத்த அனுமதிக்குமாறு பொலிஸார் விடுத்த
வேண்டுகோளுக்கு நீதவான் அனுமதி வழங்கினார்.


0 Comments