எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி
கொண்டாடப்படவுள்ள சுதந்திரத்தினத்தின் தொனிப்பொருள் 'ஒற்றுமையைக்
கட்டியெழுப்புவோம்- உலகை வென்ற நாட்டில்' என்பதாகும். சுதந்திரத் தினத்தை
முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி கொழும்பு 7 ல்
அமைந்துள்ள சுதந்திரச் சதுக்கத்தில் சமய அனுஷ்டானங்களும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன.
சுதந்திரத் தினத்தில் தேசிய கீதத்தைப்
பாடுவதற்கான அகில இலங்கை ரீதியாக பாடசாலை மாணவ மாணவிகள் 110 பேர்
கலந்துகொள்ளவுள்ளனர். கலாசார ஊர்வலமொன்றும் இதன்போது ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இம்முறை முப்படையினர்- பொலிஸார்- சிவில்
பாதுகாப்பு படை- தேசிய மாணவர் படை மற்றும் இளைஞர் படையணியை
பிரதிநிதித்துவப்படுதும் 3500 பேர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.


0 Comments