2014 ஆம் ஆண்டின்
முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக சகல தமிழ், முஸ்லிம், சிங்கள
பாடசாலைகளும் இன்று 2ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு
கொழும்பு லும்பினி வித்தியாலயத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன
தலைமையில் விசேட வைபவம் இன்று (02) நடைபெற்றது.
கல்வியமைச்சின் உயர் அதிகாரிகள் பலர்
கலந்துகொண்ட இந்த வைபவத்தில் அமைச்சர் உரையாற்றுகையில், கிராமப்புற
பாடசாலைகளின் கல்வித்தரம் இப்போது உயர்ந்துள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின் வழிகாட்டலில் அதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு
மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.


0 Comments