ஆங்கில புத்தாண்டு பிறக்கிறதாம் சந்தோஷமாக
கொண்டாட வேண்டுமாம். நமது இளசுகளிருந்து பெரியோர் வரை குடும்பமாக, வயோதிபக்
குழுக்களாக தலைநகரை நோக்கி செல்கின்றனர். நமது சமூகம் முன்னோக்கி
செல்கிறதோ இல்லையோ பின்னோக்கி செல்வதில் முதலிடம் தான்.
ஆங்கில மாதங்களை அசால்டாக சொல்லும் நாம்
இஸ்லாமிய மாதங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாது தவிக்கிறோம். இஸ்லாமிய
புதுவருடம் பிறந்து முடிவடையும் தருவாயில் “புதுவருட வாழ்த்துக்கள்”
என்றவாறு குறுந்தகவல் பரிமாறல் நடக்கிறது நண்பர்களுக்கிடையில்.
ஆங்கில நாட்காட்டிதான் வழக்கத்தில்
இருக்கின்றது என்றாலும் இஸ்லாமிய மார்க்கத்தை சுமந்த நாம் கண்ணியமாக வாழ
வழிகாட்டியாக இருக்க வேண்டிய நாம் இவ்வாறானதொரு போக்கில் போவது எமக்கு
விளங்குவதில்லை.
முஹர்ரம் மலர்ந்தது – அது
முஸ்லிமுக்கு தெரியாது..
ஆங்கிலேய மாதம் மட்டும்
முஸ்லிமுக்கு தெரியாது..
ஆங்கிலேய மாதம் மட்டும்
அனைவருக்கும் தெரிகிறது…
வந்ததுவும் புரியலையோ..
வருடத்தின் முதல் மாதம்
இதுவென தெரியலையோ..
(எம்.எச்.அப்துல் ரஹ்மான்)
முஹர்ரம் மாதம் பிறந்தவுடன் ஆசூரா
தினங்களில் நோன்பு நோற்று இறைவனை சந்தோஷப்படுத்த முனையாது ஆங்கில
புத்தாண்டு பிறக்க, வானவேடிக்கைகள் நிகழ்த்தி இறைவனின் கோபத்தை சம்பாதிக்க
வழிகளை ஏற்படுத்துகிறோம்.
வாகனங்கள் பிடித்து காசினை கரியாக்கி
பொழுதை கழிப்பதற்காக வேண்டி சுற்றும் சமூகம், நபர்கள் மற்றும் வாலிபர்கள்
புரிந்துக்கொள்ள மாட்டார்களா.. இதுவும் வீண்விரயம் தானென்று.
அவர்களோடு நாமும் சேர்ந்து குத்தாட்டம்
போட்டு விட்டு நமது வாழ்வில் குதுகலம் இல்லையே, நிம்மதி இல்லையே என்று
இறைவனை நொந்து எந்தவித பிரயோசனமும் இல்லை. இவ்வாறான இடங்களில் தான்
இறைவனின் கோபம் இறங்கப்படும். அவ்வாறனபோது கைசேதப்படுவோர் நாங்கள்தானே.
ஆங்கில புதுவருடத்தை எதிர்பார்த்து நேரசூசி
அமைக்கும் நபர்கள், ஆங்கில புதுவருடத்தில் என்ன என்ன செய்ய வேண்டும் என
பட்டியல் இடும் வாலிபர்கள், ஆங்கில புதுவருடத்தில் என்ன என்ன விடயங்களை
தவிர்க்க வேண்டுமென பட்டியலிடும் நம் சகோதரர்கள் முஹர்ரம் பிறப்பது எப்போது
என்று அறியாதிருகின்றனர்.
துல்ஹஜ் இறுதியில் சுயவிசாரணை செய்து எமது
வாழ்கையின் சாதக பாதகங்களை இனம்கண்டு அதனை சரிசெய்யும் விதமான ஏற்பாடுகள்
செய்து நமது புதுவருடத்தை வரவேற்று அதன் வழி நடப்போமானால் நல்லதே.
முஹர்ரம் மாதத்தை முஸ்லிம்களான நாம்
மறக்காது வரவேற்று, நோன்பு பிடித்து இறைவனை திருப்தி படுத்தினால் இறைவன்
முகம் பார்ப்பானே, நிம்மதி தேடி வந்திடுமே..
முஸ்லிம்கள் – முஹர்ரம் மாதம் – இஸ்லாமிய புதுவருடம்…


0 Comments