Subscribe Us

header ads

கொச்சைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தந்தை-மகள் உறவு காலாச்சாரம்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

இன்று இவ்வுலகமே காமத்தின் முன் அடிபணியும் நிலை தோன்றிவருகிறது.

இக் காமப் பசியானது மதத்தலைவர்கள், ஆட்சியாளர்கள்,அறிஞர்கள்,புத்தி ஜீவிகளைக் கூட விட்டு வைத்ததாய் இல்லை.

எனினும்,இவைகளை விட பாரதூரமான,கிஞ்சித்தும் ஏற்க முடியாத காமத்தின் விளைவுகளில் ஒன்று தான் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தை-மகள் உறவு

இப்போது தந்தை-மகள் உறவுகள் கொச்சைப்படுத்தப்பட்டு அடிக்கடி சில நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

கடந்த 10 ம் திகதி கூட யாழ்ப்பாணத்திலே ஒரு மகள் ஒரு தந்தையின் காமப் பசிக்கு இரையாகியிருந்தாள்.

பல மகள்கள் இப்படியான தந்தைகளின் காம பசிக்கு இரையாகி இருந்தும்.அவமானம் பார்த்து,அது மூடி மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உண்மையில் தந்தை மகள் உறவை விட மேன்மையான உறவு எதுவாகவும் உலகில் இருக்க முடியுமா?

உண்மையில் இந்த உறவே கொச்சைப்படுத்தப்படுமாக இருந்தால்.வேறு எந்த உறவை தான் உலகம் நம்ப முடியும்?

எனவே இந்த நிலைமை தொடருமாக இருந்தால்.

எதிர்காலத்திலே ஒரு மிகக் கேவலமான அருவருக்கத்தக்க கலாச்சாரத்தை உலக அரங்கிலே தோற்றுவிக்கும்.

பாவங்கள் சாதாரணமாக நடைபெறும்,குடும்ப முறைமை இல்லாமல் ஆக்கப்படும்.

எனவே இக் கலாச்சாரம் முளையிலே கிள்ளி எறியப்படல் வேண்டும்.

இதற்கான காரணம் ஆராயப்பட்டு உரிய தீர்வை இச் சமூகம் செயற்படுத்த வேண்டும்.

Post a Comment

0 Comments