நுரைச்சோலை, களனிதிஸ்ஸ, ரன்தம்பே, ரந்தெனிகல ஆகிய மின் நிலையங்கள்
பழுதடைந்துள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படலாமென
தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரன்தம்பே, ரந்தெனிகல ஆகிய மின் நிலையங்கள் தற்போது தொழிற்படவில்லை எனவும் நுரைச்சோலை, களனிதிஸ்ஸ ஆகிய மின் நிலையங்கள் முழுமையாகத் தொழிற்படவில்லை எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் (கரி) மின் நிலையத்தில் இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் திருத்த வேலைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், மின் வெட்டு இடம்பெறாதென இலங்கை மின்சார சபையின் தலைவர் டபிள்யூ.வி.கணேகல தெரிவித்துள்ளார்.

0 Comments