Subscribe Us

header ads

'ஹெட் லைட்'கள் பகலிலும் ஒளிரப்பட வேண்டும்: பொலிஸ்

மேல் மாகாணத்தில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களின் பிரதான விளக்குகள் (ஹெட் லைட்) பகல் வேளைகளிலும் ஒளிரப்பட வேண்டும் என்றும் இந்த நடைமுறை நாளை வியாழக்கிழமை (23) முதல் அமுல்படுத்தப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு பகல் வேளைகளில் பிரதான விளக்குகளை ஒளிர விடுவதன் மூலம் விபத்துக்களைக் குறைக்க முடியும் என்று வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த நடைமுறை வெற்றியளிக்கும் பட்சத்தில் இதனை சட்டரீதியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.


Post a Comment

0 Comments