ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் நிலவும் அரசியல் அசாதாரண சூழ்நிலை காரணமாக
தொடர் குறித்து சந்தேகங்கள் நிலவிவரும் நிலையிலேயே போட்டி
அட்டவணையை ஆசிய கிரிக்கெட் சபை (ஏ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது.
இலங் கை, இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்பாகனிஸ்தான்
ஆகிய அணிகள் மோதும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி
மாதம் 5 ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையிலேயே போட்டிக்கான அட்டவணை நேற்று
வெளியிடப்பட்டது. மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள
இத்தொடரில் 11 போட்டிகள் இடம்பெவுள்ளன. இதில் தொடரின் முதல்
போட்டியில் நடப்பு சம்பியன் பாகிஸ்தான்-– இலங்கை ஆகிய அணிகள்
மோதுகின்றன.
அதேவேளை, இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்
இந்திய- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி மார்ச் மாதம் 2 ஆம் திகதி
நடைபெறவுள்ளது.


0 Comments