ஆலி - எல மொரகொல்ல தோட்டத்தின் மத்தியில் பலவந்தமாக புத்தர் சிலை ஒன்றினை வைப்பதற்கு
முற்பட்ட வேளையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
மேற்படி தோட்ட மத்தியில், கிராமிய இளைஞர்கள் சிலர் புத்தர்
சிலையொன்றினை வைக்க முற்பட்டனர். இதனையறிந்த தோட்ட மக்கள்
எதிர்ப்பினை தெரிவித்த வேளையில் இருதரப்பினருக்குமிடையே மோதல்
ஏற்பட்டுள்ளது. இம்மோதலில் மொரகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த இருவர்
காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பதுளைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட
புகாரையடுத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர்
தேடப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து புத்தர் சிலை வைக்க முற்பட்டது மற்றும் தாக்குதல்
சம்பவம் ஆகியவற்றினை முன்னிலைப்படுத்தி அவற்றினை ஆட்சேபித்து
மொரகொல்லை தோட்டத் தொழிலாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


0 Comments