தனது அன்புக்குரியவர்களின்
உருவப்படங்களை உள்ளங்கை தோலில் நூலால் பின்னி ஸ்பெயினைச் சேர்ந்த
ஓவியர் ஒருவர் புதுமை படைத்துள்ளார்.
வெரியரோ நகரைச் சேர்ந்த டேவிட் கதா என்ற மேற்படி 21 வயது ஓவியர்,
வலியைப் பொருட்படுத்தாது தனது காதலி தமரா உள்ளடங்கலான குடும்ப
உறுப்பினர்களை உள்ளங்கை தோலில் ஊசியையும் வர்ண நூல்களையும்
பயன்படுத்தி பின்னி வடிவமைத்துள்ளார்.
மேற்படி மிகவும் சிரமமும் வலியும் தரக்கூடிய உருவப்பட கலைப்
படைப்பொன்றை உருவாக்க அவர் 4 மணித்தியால நேரத்தை செலவிட்டுள்ளார்.
அந்த உருவப்படத்தை பின்னி முடித்ததும் அதனை அவர் உரித்தெடுக்கையில் உள்ளங்கையில் லேசாக இரத்தக் கசிவு ஏற்படுகிறது.
இது தொடர்பில் டேவிட் கதா விபரிக்கையில்,
''நான் மிகவும் நேசிப்பவர்களை உள்ளங்கையில் பின்னுகையில், அவர்கள்
எனது வாழ்வு தொடர்பில் தமது அடையாளமொன்றை எனது கையில் விட்டுச்
செல்கின்றனர். இதன் போது ஏற்படும் வலி ஒரு பொருட்டல்ல'' என்று
கூறினார்.
அவர் தனது சகோதரனான ஜாவியர், தாத்தாவான கதா, அத்தையான பி, தனது
தந்தை, தனது காதலியான தமரா, பாட்டியான ஜொஸப்பினா, நண்பரான கார்லொஸ்,
ஆசிரியரான சியுகோ மற்றும் பலரது முகங்களை தனது உள்ளங்கையில்
பின்னியுள்ளார்
0 Comments