பொகவந்தலாவை,லெச்சுமித்தோட்டம் மேற்பிரிவைச்சேர்ந்த 7 வயது சிறுமி, சாணம்
அள்ளுவதற்காக மாட்டுப்பட்டிக்கு சென்றபோது அச்சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்தியதாக கூறப்படும் 58 வயதான நபரை நேற்றுமாலை கைது செய்ததாக
பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 Comments