Subscribe Us

header ads

மீலாத்துன் நபி விழா நிகழ்ச்சிகளை 13 ஆம் திகதி நடத்துமாறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு பணிப்பு

(எம்.எம்.ஏ.ஸமட்)
2014ஆம் ஆண்டுக்குரிய மீலாத்துன் நபி விழா நிகழ்ச்சிகளை எதிர்வரும் 13ஆம் திகதி நடத்துமாறு சகல முஸ்லிம் பாடசாலைகள்; மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளின் அதிபர்களை கல்வி அமைச்சு பணித்துள்ளதாக அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட். தாஜுடீன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கல்வி அமைச்சின் பணிப்புரையின் பிரகாரம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்றும் பாடசாலைகள் என்பவற்றில் நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மீலாத்துன் நபி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான சுற்று நிருபங்களும் அமைச்சினால் சகல குறித்த பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியில் 2014ஆம் ஆண்டிலும் குறித்த ஜனவரி 13ஆம் திகதி இவ்விழாவிற்கான நிகழ்ச்சிகளை நடத்துமாறு சகல மாகாணக் கல்விப பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள், முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் என்வற்றின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சின் கொள்கைத்திட்டமிடல் மற்றும் முன்னேற்றத்திற்குப் பொறுப்பான மேலதிக செயலாளர் எஸ்.யு விஜேயரத்த இது குறித்த அறிவுறுத்தல் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக பணிப்பாளர் தாஜுடீன் தெரிவித்தார்.

அத்துடன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவு இணைந்து நடாத்தும் வருடாந்த பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மீலாத்துன் நபி விழாப் போட்டி நிகழ்ச்சிகள் இவ்வாண்டும் நடாத்தப்படுமென பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டார். JM

Post a Comment

0 Comments